வவுனியாவில் வேட்பாளரின் துண்டுபிரசுரங்களை விநியோகித்த இருவர் கைது!!

526

arrests

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியாவில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் வாக்காளர் ஒருவருடைய சிறிய துண்டுபிரசுரங்களை விநியோகித்த குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் தேசியக் கட்சி ஒன்றின் வேட்பாளருடைய சிறிய துண்டுபிரசுரங்களை விநியோகித்து கொண்டிருந்த போதே குறித்த இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.