வவுனியாவில் 63 வீத வாக்குப்பதிவு : தபால்மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!!(காணொளி, படங்கள்)

905

இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணிக்கு நிறைவுபெற்றது.

வாக்களிப்புக்கள் நிறைவடைந்துள்ள நிலையில் வன்னித் தேர்தல் தொகுதியின் வவுனியா மாவட்டத்திற்கான 134 வாக்களிப்பு நிலையங்களில் இருந்தும் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் வவுனியா மாவட்ட செயலகத்தை வந்தடைந்துள்ளன.

வன்னித் தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் 63 வீத வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டறை தகவல்கள் தெரிவிகின்றன.

109705 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 69224 பேர் வாக்களித்துள்ளனர்.

அதேவேளை வன்னித் தேர்தல் தொகுதியை உள்ளடக்கிய மன்னார் மாவட்டத்தில் 74.6 வீதமும் முல்லைத்தீவில் 70.8 வீதமும் வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்..

தேர்தல் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்..

-வவுனியா மாவட்டச் செயலகத்திலிருந்து விசேட செய்தியாளர்-

11857541_397133210480000_1443152209_n 11868732_397133740479947_990160526_n 11868887_397132790480042_457205662_n 11872628_397133120480009_55248062_n 11872972_397133280479993_166145696_n 11880092_397133707146617_64121680_n 11880776_397133097146678_982500775_n 11880973_397132793813375_1051533160_n 11908027_397132810480040_1296294879_n 11908238_397133820479939_1154001596_n 11911429_397133267146661_1014655023_n 11911789_397133717146616_206882230_n 11911861_397133207146667_1582537849_n 11912928_397133133813341_93898486_n