வவுனியா தபால்மூல முடிவுகள் 11.45 மணியளவில்!!

555

Vavuniya

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் நிறைவடைந்துள்ள நிலையில் வன்னித் தேர்தல் தொகுதியின் தபால் மூல வாக்குகள் எண்ணும் நடவடிக்கை தற்போது துரிதகதியில் நடைபெற்று வருகின்றது.

வன்னித் தேர்தல் தொகுதியில் 6,588 பேர் தபால் மூலம் வாக்களித்திருந்தனர். இவ்வாக்குகள் எண்ணும் பணி நான்கு கட்டங்களாக பிற்பகல் 4.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

இதன்படி 11.45 மணியளவில் தபால் முல வாக்குப்பதிவுகளின் முடிவுகள் வெளியிடப்படும் என நம்பப்படுகின்றது.

முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வவுனியா நெற் தேர்தல் விசேட சேவையுடன் இணைந்திருங்கள்.