மகாராணி எலிசபெத்தின் சாதனை!!

533

1834857880Untitled-1இங்கிலாந்து ராணியாக இரண்டாம் எலிசபெத் பதவி வகிக்கிறார். இவரது தந்தை மரணம் அடைந்த பிறகு 1952–ம் ஆண்டு ​பெப்ரவரி 6–ம் திகதி அரசியாக ஆக பதவி ஏற்றார். அப்போது அவரது வயது 25.

தற்போது அவருக்கு 89 வயது ஆகிறது. எனவே கடந்த 63 ஆண்டுகளாக இவர் ராணி ஆக பதவி வகித்து வருகிறார்.மூன்று தலைமுறைக்கு முந்தைய இவரது முப்பாட்டி விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகள் ´அரசி´ ஆக இருந்துள்ளார். அவரைப் போன்று தற்போது இரண்டாம் எலிசபெத்தும் 63 ஆண்டுகள் ராணி ஆக இருந்து வருகிறார்.

வருகிற செப்டம்பர் 9–ம் திகதிக்குப் பிறகு இவர் இங்கிலாந்தில் நீண்ட நாள் ராணி ஆக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெறுகிறார். ஏனெனில் விக்டோரியா மகாராணி செப்டம்பர் 9–ம் திகதிதான் ´ராணி´ ஆக பதவி ஏற்றார்.