பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கைத் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகிய நடிகை ஜெனிலியா, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க இருக்கிறார்.
பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம் உள்பட தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ஜெனிலியா.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடித்து வந்த ஜெனிலியா, கடந்த 2012ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த, ஜெனிலியாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.





