மெழுகு பூசப்பட்ட அப்பிள்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்குக் கடும் எச்சரிக்கை!!

476

appleமெழுகு பூசப்­பட்ட அப்பிள் பழங்­களை விற்­பனை செய்யும் வியா­பா­ரி­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென கல்­முனை வடக்கு சுகா­தாரப் பணி­மனை எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

இது­தொ­டர்பில் கல்­முனை வடக்கு சுகா­தார பணிப்­பாளர் டாக்டர் கே.கணேஷ்­வரன் தெரி­விக்­கையில் கல்­மு­னைப்­பி­ர­தே­சத்தில் செயற்கை முறையில் (இர­சா­யனம் கலந்து) பழங்­களை கனிய வைக்க வேண்டாம் என பழ­வி­யா­பா­ரி­க­ளுக்கு அறி­வு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இதையும் மீறி பழங்­க­ளுக்கு இர­சா­யனம் தெளித்து கனி­ய­வைத்தால் சட்ட நட­வ­டிக்­கைக்குட் படுத்­தப்­பட்டு வரு­கின்­றனர்.

தற்­போது கல்­முனைப் பிர­தே­சத்தில் மெழுகு பூசப்­பட்ட அப்பிள் பழங்கள் விற்­பனை செய்­யப்­பட்டு வரு­வ­தாக நுகர்­வோ­ரிடம் இருந்து முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­று­வ­ரு­கின்­றன.

இத­னை­ய­டுத்து பழக்­க­டை­களைப் பிர­தேச பொதுச் சுகா­தாரப் பரி­சோ­த­கர்­களின் மூலம் பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்தி வரு­கின்றோம். இவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு 1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.