
இலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.
இதில் காலியில் இடம்பெற்ற முதல் போட்டியில் இலங்கை அணியிடம் 63 ஓட்டங்களால் இந்திய அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு பி.சரவணமுத்து விளையாட்டரங்கில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.
இந்தப் போட்டியுடன் இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





