அமெரிக்காவில் அதிர்ச்சி: 3 மகன்களை கொலை செய்த இரக்கமற்ற தாய்!!

559

brittaniஅமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 13 மாதங்களில் தனது 3 மகன்களைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒஹாயோ மாநிலத்தில் உள்ள லோகன் கவுன்ட்டியைச் சேர்ந்தவர் ஜோசப் பில்கிங்டன். அவரது மனைவி பிரிட்டனி. அவர்களுக்கு 3 மகன்கள், 4 வயதில் ஒரு மகள் உள்ளார். பிரிட்டனுக்கு தனது கணவர் மகன்கள் மீது அதிக அன்பு செலுத்துவதாகவும், மகளை கவனிக்காதது மிகவும் வருத்தமாகவும் இருந்தது. இது நாளடைவில் கோபமாக மாறியது. மூன்று மகன்களையும் கொன்றுவிட முடிவு செய்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி தனது 4 வயது மகன் கவினின் முகத்தில் போர்வையை போர்த்தி மூச்சை நிறுத்தி கொலை செய்தார். ஆனால் காவல்துறைக்கு போன் செய்து தனது மகன் மூச்சுவிடாமல் கிடப்பதாக தெரிவித்தார். சிறுவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாகக் கருதப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரின் மூன்று மாத மகன் நியால் இறந்து கிடந்ததை ஜோசப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து போலீசாருக்கு பிரிட்டனி மீது சந்தேகம் ஏற்பட்டது. கவின் மரணம் குறித்து விசாரித்து வந்த போலீசார் நோவா மற்றும் ஹெய்லியை வீட்டில் இருந்து அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாயன்று காலை 3 மணிக்கு பிரிட்டனி போலீசாரை அழைத்து தனது 3 மாத ஆண் குழந்தை நோவா மூச்சுவிடாமல் இருப்பதாகத் தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பிரிட்டனியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மகளைப் பாதுகாக்க 3 மகன்களைக் கொலை செய்ததை பிரிட்டனி ஒப்புக் கொண்டார். இச்சம்பவம் குறித்து ஜோசப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.