விளையாட்டு வினையானது: தந்தையை சுட்டுக் கொன்ற 2 வயது சிறுவன்!!

1162

gun_shotஅமெரிக்காவில் 2 வயது சிறுவன் தந்தை கைத்துப்பாக்கியை எடுத்து விளையாட்டாகச் சுட்டுக்கொன்றதால் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.

அமெரிக்காவில் உள்ள பிர்மிங்காம் என்ற இடத்தைச் சேர்ந்த 31 வயது வாலிபர் தனது 2 வயது மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்தச் சிறுவன் தந்தையின் கைத்துப்பாக்கியை எடுத்து விளையாடிக்கொண்டிருந்தான்.

சிறுவன் திடீரென துப்பாக்கியின் விசையை அழுத்தியதால் துப்பாக்கியில் இருந்த குண்டு தந்தையின் தலையை துளைத்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் பிர்மிங்காம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்கள் அமெரிக்காவில் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது