வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் குடியேறியுள்ள 52 குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு கமநல சேவைகள் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது..
யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா வைரவப்புளியங்குளம் குளத்தை அண்டிய பகுதிகளில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் 52 குடும்பங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறுமாறு கமநல சேவைகள் திணைக்களம் உத்தரவிட்டிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து அக்கிராம மக்களை நேரடியாக சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடைய பிரச்சனைகளையும் கேட்டு அறிந்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மக்கள்..
2005இல் இந்த இடத்தில் குடியேறி பிரதேச செயலாளரின் அனுமதியுடனே மின்சாரம் வழங்கப்பட்டதாக குறிப்பிட்ட மக்கள் குடும்ப அட்டை முதற்கொண்டு வாக்குச்சீட்டு அட்டைவரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
-பிராந்திய செய்தியாளர்-






