
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மாகாணசபைகளில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் 46 பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணசபை உறுப்பினர்கள் 12 பேர் இம்முறை பாராளுமன்றம் செல்கின்றனர். மேல் மாகாண சபையின் மூன்று மாவட்டங்களிலிருந்தும் உதயகம்மன்பில, ஹிருணிகா பிரேமச்சந்திர, முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார், மனோ கணேசன் ஆகியோர் பாராளுமன்றம் செல்வதற்கு மக்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் நிமல் லன்சா, சிசிர ஜயக்கொடி, ஹர்ஷன ராஜகருணா, எட்வட் குணசேகர, கவிந்து ஜயவர்த்தன பியல் நிஷாந்த ஆகியோர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தென் மாகாணசபையிலிருந்தும் ஐந்து உறுப்பினர்கள் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கீதா குமாரசிங்க, பந்துலால் பண்டாரகொட, விஜயபால ஹெட்டியாராச்சி, காஞ்சன விஜயசேகர மற்றும் நிஹால் கலபத்தி ஆகியோர் தென்மாகாணசபையிலிருந்து பாராளுமன்றத்திற்கு செல்கின்றனர்.
மத்திய மாகாணசபையிலிருந்து ஆறுபேர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அநுராத ஜயரத்ன, லக்கி ஜயவர்த்தன மயந்த திஸாநாயக்க, எம்.வேலுக்குமார் உள்ளிட்டோர் மத்திய மாகாண சபையில் கண்டி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மத்திய மாகாணசபையிலிருந்து கே. கே. பியதாஸ, ரஞ்சித் அலுவிகார ஆகியோரும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணத்திலிருந்து ஏழு பேர் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஹேஷான் விதானகே, ஏ.ஏ. விஜயதுங்க, தாரக பாலசூரிய, துஷ்மந்த மித்திரபால, துஷித்தா விஜயமான, சுஜித் சஞ்ஜய மற்றும் சத்தீப் சமரசிங்க ஆகியோர் சப்ரகமுவ மாகாணசபையின் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வடமேல் மாகாணசபையிலிருந்து ஐவர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வடமேல் மாகாணசபையின் குருணாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலிருந்து தயாசிறி ஜயசேகர, சனத் நிஷாந்த, எக்டர் அப்புஹாமி, சாந்த சிசிர அபேசேகர, அசோக்க பியந்த ஆகியோர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஊவா மாகாணசபையின் பதுளை மாவட்டத்திலிருந்து நால்வர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஹரீன் பெர்னாண்டோ, சாமர சம்பத், ரவீந்திர சமரவீர, வடிவேல் சுரேஷ் ஆகியோர் பாரா ளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள னர்.
எட்டாவது பாராளுமன்றத்திற்கு வடமத்திய மாகாணசபையிலிருந்தும் இருவர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். சந்திம மஹிந்தசோம, சிட்னி ஜயரத்ன ஆகியோர் பாராளுமன்றம் செல்கின்றனர்.
கிழக்கு மாகாணசபையிலிருந்து நான்கு உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். விமலவீர திஸாநாயக்க, தயாகமகே, எம்.எம். மன் சூர் மற்றும் இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்ப ட்டுள்ளனர்.





