வவுனியாவில் வீட்டு உரிமையாளரைத் தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்த முகமூடித் திருடர்கள்!!(படங்கள், காணொளி)

746

வவுனியா கோயில்புதுக்குளம் 10ம் ஒழுங்கையில் இன்று 21.08.2015 நள்ளிரவு 1.30 மணியளவில் வீடு ஒன்று முகமூடி திருடர்களால் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது..

இன்று நள்ளிரவு 1.30 மணியளவில் முகமூடி அணிந்த மூன்று நபர்களை கொண்ட குழு வீட்டின் கதவை உடைத்து உட்புகுந்ததுடன் வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல் மேற்கொண்டு வீட்டிலிருந்த 50 000 ரூபா பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றவேளை கோவில்புதுக்குளம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி கொள்ளைச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-பிராந்திய செய்தியாளர்-

 20150821_090336 20150821_090638 20150821_090710 20150821_090753 20150821_091538 20150821_091546 20150821_09161820150821_090323