
தமிழர் விடுதலைக் கூட்டணியின் வவுனியா மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநாதன் கிசோர் அவர்கள் நேற்று (20.08.2015) வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றிலேயே பின்வருமாறு தெரிவித்தார்..
நடந்து முடிந்த தேர்தல் நீதியும் நேர்மையாகவும் நடந்து முடிந்துள்ளது. மக்கள் எனக்கு ஆணை வழங்காத போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 16 ஆசனங்களை வழங்கியிருக்கிறார்கள்.
எனவே 68 வருடங்களாக தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். கடந்த காலத்தில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி மைத்திரி அரசை கொண்டுவந்த தமிழ் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆணையை வழங்கியுள்ளனர்.
நாளை (21.08.2015) ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கும் நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளான வடக்கு கிழக்கு இணைப்பு, இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு கிழக்கிலுள்ள நிலங்கள் மீட்கப்பட வேண்டும்.
அரசியல் கைதிகளின் விடுதலை, அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சமஸ்டி முறையிலான தீர்வையும் பெற்றுத்தர வேண்டுமென குறிப்பிட்டார்.
-பிராந்திய செய்தியாளர்-





