யாழ்ப்பாணம் தென்மராட்சி, மீசாலை, ஏரம்பு வீதியிலுள்ள காணி ஒன்றிலிருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்தக் குண்டு நேற்று சனிக்கிழமை மாலையில் மீட்கப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
காணியைத் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் குறித்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தென்மராட்சி, சரசாலை வடக்குப் பிரதேசத்தில் நேற்று முன் தினம் காணியைத் துப்பரவு செய்தபோது இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் கணவன், மனைவி இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.