ஒரு கையில் கட்டுடன் பரீட்சைக்கு தோற்றிய மாணவன்!!

482

Student

விறகு வெட்டச் சென்ற போது கையில் படுகாயமடைந்த 10 வயதுடைய ரஞ்ஜன் ஹரீஸ் என்ற மாணவன் இன்று (23.08) இடம்பெற்ற ஐந்தாம் தரப் புலமை பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளார்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்படை தோட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவர், கடந்த 20ம் திகதி விறகு வெட்டிக்கொண்டிருந்த போது வலக்கையில் இருந்த கத்தி நழுவி இடக் கையை வெட்டியுள்ளது.

சம்பவத்தை அடுத்து சிறுவன் உடனடியாக டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி – பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

சிறுவனின் இடது கை வெட்டப்பட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததாக தெரிவித்த டிக்கோயா வைத்தியசாலை வைத்தியர், சத்திர சிகிச்சையின் மூலம் கையை பொருத்த முடியும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.