
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் கடந்த 20ம் திகதி ஆரம்பமானது.
இந்த டெஸ்டில் நேற்றைய ஆட்டத்தின் போது இலங்கை வீரர் லகிரு திரிமானே, இஷாந்த் சர்மா பந்தில் விக்கெட் காப்பாளர் சகாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
நடுவர் அவுட் கொடுத்ததும் அவர் சிறிது நேரம் பிட்சில் நின்றார். மேலும் தலையை அசைத்தப்படியே வெளியேறினார்.
இது ஐ.சி.சி.யின் வீரர்களின் நடத்தை விதிமீறல் ஆகும். இதுபற்றி விசாரித்த போட்டி நடுவர் அன்டிபை கிராப்ட் திரிமானேவுக்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்தார்.





