முல்லைத்தீவில் அரச போக்குவரத்து பஸ்ஸைக் கடத்திய இருவர் கைது!!

839

Bus

முல்லைத்தீவு போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான கடத்தப்பட்ட அரச போக்குவரத்து பஸ் ஒன்று ஹோஹம்ப என்னும் இடத்தில் வைத்து மீட்க்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அரச போக்குவரத்து பஸ் ஒன்று ​நேற்று அதிகாலை, சேவையில் ஈடுபடும் நோக்கில் கொக்கிளாய் என்னும் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

அதனை இரு நபர்கள் நேற்றிரவு (செவ்வாய்கிழமை) 7.30 மணியளவில் கடத்திச் சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக போக்குவரத்துச் சபையால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து துரிதமாகச் செயற்பட்ட முல்லைத்தீவிலுள்ள விஷேட பொலிஸ் பிரிவினர், ஹோஹம்ப என்னும் இடத்தில் வைத்து போக்குவரத்து பஸ்ஸையும் அதிலிருந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

அதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவுப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.