சங்கக்காரவின் ஓய்வு கவலையளிகின்றது : தொடரை வெற்றிபெற்று சங்கவிற்கு பரிசளிப்போம் : மத்­தியூஸ்!!

451

mathews

சர்­வ­தேச கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்­வு­பெற்ற குமார் சங்­கக்­கா­ரவை வெற்­றி­யுடன் வழி­ய­னுப்ப முடியாமல் போனது கவ­லை­யா­கத்தான் இருக்­கி­றது. ஆனால் அவ­ருக்­காக தொடரைக் கைப்­பற்றி அந்த வெற்­றியால் சங்­காவை கௌர­விப்போம் என்று இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மத்தியூஸ் தெரி­வித்தார் .

இந்­திய – இலங்கை அணி­க­ளுக்­கி­டை­யி­லான 2ஆவது டெஸ்ட் போட்­டி­யோடு சங்­கக்­கார சர்­வ­தேசக் கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்­வு­பெற்றார். இந்தப் போட்­டியில் இலங்கை அணி தோல்­வியைத் தழுவிக்கொண்­டது. காலியில் நடந்த முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் இலங்கை அணி வெற்றிபெற்­றது. இன்னும் மீத­மி­ருப்­பது ஒரே ஒரு போட்­டிதான்.

இந்தப் போட்­டியில் வெற்­றி­பெற்று தொடரை நாம் வென்று வெற்­றியை சங்­கா­வுக்கு பரி­ச­ளிப்போம் என்று மத்தியூஸ் தெரி­வித்தார்.