இரு பெண்களை கத்தியால் குத்திய சிறுவன் தலைமறைவு!!

498

140919Knife-jpgஇரு பெண்­களை கத்­தி­யினால் குத்­தியும் பொல்­லு­க­ளினால் தாக்­கியும் படு­கா­யங்­க­ளுக்­குள்­ளாக்­கிய பதி­னேழு வயது நிரம்­பிய சிறுவன் தலை­ம­றை­வா­கி­யுள்ளான்.

மடுல் சீமை மெட்­டி­கா­தன்னை என்ற இடத்தைச் சேர்ந்த ஸ்ரீயாணி தேவிகா எனும் 29 வயது நிரம்­பிய பெண்ணும் டி.எம்.சந்­தி­ரா­வதி என்ற 45 வயது நிரம்­பிய பெண்­ணுமே மேற்­படி சிறு­வனால் தாக்­கப்­பட்டு படு­கா­யங்­க­ளுடன் பதுளை அர­சினர் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

இச்­சம்­பவம் 25 ஆம் திகதி மாலை இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். இத் தாக்­குதல் சம்­ப­வத்­திற்­கான காரணம் இது­வ­ரையில் கண்­ட­றி­யப்­ப­ட­வில்­லை­யென்றும் தாக்­கு­தலை மேற்­கொண்ட சிறுவன் தலை­ம­றை­வா­கி­யுள்ளான்.

சிறு­வனைக் கைது செய்யும் பொருட்டு மடுல்சீமைப் பொலிஸார் தேடுதல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளனர். ஸ்ரீயானி தேவிகா என்ற பெண்ணை கொலை செய்ய முயன்ற வேளையில் மற்றைய பெண் தடுக்க முயன்ற போதே இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.