தேசிய அரசாங்கம் குறித்து கூட்டமைப்பு இணக்கப்பாட்டுக்கு வரவில்லை!

1227

495972423Untitled-2தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணக்கப்பாட்டுக்கு வரவில்லை என, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

தும்முல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பெரும்பாலும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம தெரிவித்த கருத்து தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து தற்போது எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடு பற்றி இரு தரப்பினரும் கருத்து வௌியிட வேண்டும் ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே கருத்து வௌியிட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.