அவுஸ்திரேலிய சிட்னி நகரில் இடம்பெற்ற பாரிய வெள்ள அனர்த்தம் காரணமாக பெருந்தொகையான மக்கள் வீடுவாசல்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிட்னி நகரின் தென் புறநகரப் பகுதிகளிலிருந்து 70 பேர் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.அத்துடன் பெருமளவு குதிரைகள், ஆடு மாடுகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
நியூ சவுத் வேல்ஸின் தென் கடற்கரையிலுள்ள இல்லாவரா மற்றும் ஷொயல்ஹவன் பிராந்தியங்களை சுற்றியுள்ள பிரதேசங்கள் இந்த வெள்ள அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





