ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடிய நடிகை சோனியா அகர்வால்!!

915

Sonia-Agarwal-Photo-Gallery-3-1நடிகை சோனியா அகர்வால் ஒரு மலையாள படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். தொடர்ந்து அவர், ஒரு பாடலுக்கு நடனம் ஆட முடிவு செய்து இருக்கிறார். சோனியா அகர்வால், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். செல்வராகவன் முதன்முதலாக இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் அவர் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து 7 ஜி ரெயின்போ காலனி மதுர கோவில் ஒரு கல்லூரியின் கதை உள்பட பல படங்களில் அவர் கதாநாயகியாக நடித்தார்.

இயக்குனர் செல்வராகவனை காதல் திருமணம் செய்து கொண்ட அவர், பின்னர் விவாகரத்தும் செய்தார். சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த அவர் மீண்டும் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தின் மூலம் திரையுலகுக்கு மறுபிரவேசம் செய்தார்.

தொடர்ந்து கதாநாயகி வாய்ப்புகளை எதிர்பார்த்து வந்த அவருக்கு அந்த வாய்ப்புகள் வராததால் ஏமாற்றம் அடைந்தார். நீண்ட இடைவெளிக்குப்பின், நகைச்சுவை நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்த ’பாலக்காட்டு மாதவன்’ படத்தில், சோனியா அகர்வாலுக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்த படத்துக்கு பிறகும் கதாநாயகி வாய்ப்புகள் அமையாததால், கதாநாயகியாகத்தான் நடிப்பது என்ற அவருடைய முடிவை மாற்றினார்.

இனிமேல் கவர்ச்சி நடனம் ஆடுவது என்ற முடிவுக்கு அவர் வந்து இருக்கிறார். முதன்முதலாக அவர், ’ஜம்னா ப்யாரி’ என்ற மலையாள படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். மலையாள பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான குஞ்சாகோ போபனுடன் இணைந்து அந்த பாடல் காட்சியில், சோனியா அகர்வால் கவர்ச்சி நடனம் ஆடினார்.

தொடர்ந்து அவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ’டான்ஸ்’ ஆட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.