இலங்கை அரசியலில் எதிர்க்கட்சிகளை முடக்கும் சதி நடவடி க்கையாகவே தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள விமல் வீரவன்ச,நல்லாட்சி பற்றி அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, சிவில் சமூக அமைப்புகளும், பௌத்த தேரர்களும் வாய் கிழியப் பேசினார்கள்.
ஆனால் இந்நாட்டின் முற்போக்குச் சக்திகளை முடக்கிப் போடும் வகையிலான அரசியல் சதிகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.இதன் முதலாவது கட்டமாகவே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யாரும் வாய் திறப்பதில்லை என்றார்.





