டிவிலியர்ஸ் 8 ஆயிரம் ஓட்டங்கள். கங்குலியின் சாதனை தகர்ப்பு!!

413

AB-de-Villiers_1தென்­னா­பி­ரிக்க – நியூ­சி­லாந்து அணிகளுக்கி­டையில் நடந்த ஒரு நாள் தொடரை தென்­னா­பி­ரிக்கா 2–1 என்ற அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்­றது.

இத் தொடரின் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டர்­பனில் நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய தென்­னா­பி­ரிக்க அணி 7 விக்­கெட்­டுக்கள் இழப்­புக்கு 283 ஓட்­டங்­களைப் பெற்­றது. இதில் டிவி­லியர்ஸ் 64 ஓட்­டங்­களை (48 பந்து, 8 பவுண்­டரி, ஒரு சிக்சர்) விளா­சினார்.

இதன்­மூலம் டிவி­லியர்ஸ் புதிய மைல்­கல்லை எட்­டினார். இது­வரை 190 ஒரு நாள் போட்­டி­களில் பங்­கேற்று 182 இன்­னிங்ஸ்­களில் களம் இறங்­கி­யி­ருக்கும் டிவி­லியர்ஸ் 8,045 ஓட்­டங்­களைக் குவித்­துள்ளார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வர­லாற்றில் அதி­வே­க­மாக 8 ஆயிரம் ஓட்­டங்­களைக் கடந்த வீரர் என்ற பெரு­மையை பெற்றார்.

இதற்கு முன்பு இந்­திய முன்னாள் தலைவர் கங்­குலி 2002-ஆம் ஆண்டில் தனது 200-ஆவது இன்­னிங்ஸில் இந்த இலக்கை கடந்ததே சாதனையாக இருந்தது. அதனை டிவிலியர்ஸ் முறியடித்தார்.