கவர்ச்சிக்கு நோ சொன்ன சமந்தா!!

683

326964-eega-300x200

போட்டி நடிகைகளில் ஸ்ருதிஹாசன், தமன்னா, சமந்தாவுக்கு வேகமாக படங்கள் குவிகின்றன.

சமந்தாவை பொறுத்தவரை நடிப்பில் தனக்கென ஒரு பாலிசியை பின்பற்றி வருகிறார். இந்நிலையில் நடிப்பை உதறும் அளவுக்கு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அவர் கூறும்போது,கடந்த ஆண்டு எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. எனவே நடிப்புக்கு முழுக்குபோட எண்ணி இருந்தேன். அதன்பிறகு நல்ல வேடங்கள் அமைந்தன.

ஆனாலும் எனது எண்ணத்தை மாற்றிக்கொள்ளாமல் அப்படியே நிலுவையில் வைத்திருக்கிறேன். 5 பாடல், அதை வைத்து கவர்ச்சியாக நடிக்க பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன்.

எந்த வேடமாக இருந்தாலும் நடிப்பதற்கான வாய்ப்புள்ள கதாபாத்திரங்கள் கிடைத்தால்தான் நடிப்பேன். அப்படி இல்லாவிட்டால் சினிமாவுக்கு முழுக்குபோடவும் தயங்க மாட்டேன் என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.