திருமண வீட்டிற்கு சென்ற பஸ் விபத்­து :10 பேர் காயம்!!(படங்கள்)

545

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தின் பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை – நுவரெலியா பிரதான வீதியில் பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து 29.08.2015 அன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் – ஆணமடுவ பிரதேசத்தில் இருந்து தியத்தலாவை நோக்கி திருமண வீட்டிற்கு சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு தனது வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பதுளை – நுவரெலியா பிரதான வீதியில் ஹாலிஎல அம்பவக பகுதியில் வீதியை விட்டு விலகி மண்மேடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேற்படி பஸ்ஸில் சிறுவர்கள் உட்பட 34 பேர் பயணித்துள்ளனர். விபத்தில் படுங்காயமடைந்த 10 பேரும் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை குறித்த பஸ்சுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-க.கிஷாந்தன்-

vlcsnap-2015-08-29-11h16m35s180 vlcsnap-2015-08-29-11h16m44s21 vlcsnap-2015-08-29-11h16m47s54 vlcsnap-2015-08-29-11h17m01s195 vlcsnap-2015-08-29-11h17m12s47