அம்பாறையில் தீ – 15 கடைகள் முற்றாக சேதம்!!

497

901360781Untitled-1

அம்பாறை நகரின் கடைகள் சிலவற்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 03.05 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 15 கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அம்பாறை தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் இதனால் உயிர்சேதங்களோ, எவருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என்பதோடு, சேத விபரங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை.

அத்துடன் தீ விபத்துக்கான காரணங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை