பதுளை பிரதேசத்தில் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1990ம் ஆண்டு பெண்கள் இருவர் உள்ளிட்ட நால்வரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்றதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்தநிலையில் பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் பண்டார அபேகோன இவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் போகஹகுபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.





