ஆஸ்திரியாவில் ஹங்கேரி எல்லைக்கு அண்மையில் நெடுஞ்சாலையொன்றில் கைவிடப்பட்டிருந்த லொறியொன்றிலிருந்து 71 குடியேற்றவாசிகளின் சடலங்கள் வியாழக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளன.
கோழி இறைச்சிகளை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படும் காற்றுப் புகாத குளிர்சாதன லொறியிலிருந்தே இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவர்கள் அனைவரும் மூச்சுத் திணறி உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.பலியானவர்கள் அனைவரும் சிரி யப் பிரஜைகள் என நம்பப்படுகிறது. அவர்களில் ஒரு பாலகன், 3 சிறுவர்கள் மற்றும் 8 பெண்கள் உள்ளடங்குகின்றனர்.
கிழக்கு ஆஸ்திரியாவிலுள்ள பார்ன் டோர்ப் நகரிலுள்ள நெடுஞ்சாலை யில் காணப்பட்ட அந்த லொறியானது ஹங்கேரியில் பதிவுசெய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த லொறியின் சாரதி ரோமானிய பிரஜை என ஹங்கேரி உறுதிப்படுத்தியுள்ளது. அந்த சாரதி சேர்பியாவிலிருந்து அந்தக் குடியேற்றவாசிகளை லொறியில் ஏற்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
பயணத்தின்போது லொறியின் பின் கதவைத் திறந்த லொறி சாரதி, அதில் பயணித்த குடியேற்றவாசிகள் அனைவரும் உயிரிழந்துள்ளதை கண்டு அச்சமடைந்து லொறியைக் கைவிட்டு தலைமறைவாகியிருக்கலாம் என கருதுவதாக பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி லொறியை அவதானித்த பொலிஸார் ஆரம்பத்தில் அது இயந்திரக் கோளாறு காரணமாகவே வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாக கருதினர்.ஆனால் பின்னர் அந்த லொறியிலிருந்து குருதி வழிந்தோடியிருப்பதும் அதற்குள்ளிருந்து பிண வாடை வீசுவதும் அவதானிக்கப்பட்டதையடுத்து அந்த லொறி பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது அந்த லொறிக்குள் பெருந்தொகையான குடியேற்றவாசிகளின் சடலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அந்த சடலங்களில் சில மோசமாக அழுகியும் ஏனைய சடலங்கள் குறைவாக அழுகியும் காணப்பட்டுள்ளன.மேற்படி குடியேற்றவாசிகள் அனை வரும் ஆஸ்திரியாவுக்குள் பிரவேசிப்பதற்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் மேற்படி குடியேற்றவாசிகளின் சடலங்கள் அடையாளம் காண்பதற்காக வியன்னாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.மோதல்கள் இடம்பெற்று வரும் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு செல்ல விரும்பும் சட்டவிரோத குடி யேற்றவாசிகள் பெருந்தொகையான பணத்தை கடத்தல்காரர்களுக்கு கட்ட ணமாக செலுத்தி எல்லையைக் கடந்து பயணங்களை மேற்கொள்வது வழமையாகவுள்ளது.
இந்த சட்டவிரோத குடியேற்றவாசி களின் மரணம் தொடர்பில் ஆஸ் திரிய அதிபர் வெர்னர் பேமான் கூறு கையில், ஆட்கடத்தல்காரர்களிடமி ருந்து மக்களின் உயிர்களைக் காப் பாற்றுவதன் அவசியம் குறித்து எச்ச ரிக்கை செய்வதாக இந்த சம்பவம் உள்ளதாக கூறினார்.
Tags:





