வவுனியாவில் பெண்களுடன் சேஷ்டைவிட்ட காவாலிகளை தப்பவிட்ட பொலிசாருடன் முரண்பட்ட மக்கள்!!(படங்கள், காணொளி)

607

வவுனியா குருமண்காடு பகுதியில் நேற்று (30.08.2015) இரவு 8 மணியளவில் பெண்களுடன் கீழத்தரமாக நடந்துகொள்ள முயற்சிசெய்த சில காவாளிகளை மக்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன் நிலையில் பொலிசார் அவர்களை தப்பவிட்டதால் அப்பகுதியில் ஒன்றுதிரண்ட மக்கள் பொலிசாருடன் முரண்பட்டனர். இதனால் அவ்விடத்தில் பரபரப்பு நிலவியது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

தந்தை, மகன் மற்றும் நான்கு சகோதரிகள் குருக்கள்புதுக்குளத்தில் உள்ள தமது உறவினரின் வீட்டிற்குச் செல்வதற்காக குருமண்காட்டில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் பேரூந்திற்காக காத்திருந்துள்ளனர்.

நீண்டநேரம் பேரூந்து வராமையால் தந்தை முச்சரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்துவதற்காக அருகில் சென்ற சமயம் அங்கு வந்த 10 பேர் கொண்ட மது அருந்திய இளைஞர்கள் கும்பல் ஒன்று பெண்களுடன் கீழ்த்தரமாக நடக்க முற்பட்டுள்ளனர்

தமது சகோதரிகளுடன் கீழ்த்தரமாக நடக்க முற்பட்ட கும்பலுடன் சகோதரர்கள் இருவரும் வாக்குவாதப்பட்டுள்ளனர். இன் நிலையில் சகோதரர்கள் இருவரையும் இக் கும்பல் தாக்கியுள்ளது. இதனை அடுத்து அருகில் உள்ள பொலிஸ் காவலரணிற்கு ஓடிச் சென்று அப்பெண்கள் முறையிட்டதுடன் அவர்களுடன் கீழ்த்தரமாக நடக்க மு அவற் பட்டவர்ககளை அடையாளம் காட்டி அவர்களில் மூவரை அங்கு கூடியவர்களின் உதவியுடன் பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர்.

மேலும் 119 அவசர பொலிஸாருக்கும் அழைப்பை ஏற்படுத்தி சம்பவத்தை தெரியப்படுத்திய நிலையில் சுமார் 15 நிமிடங்கள் கழித்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருவதை அவதானித்த மக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட மூவரும் பொலிசாரின் துணையுடன் தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து அங்கு ஒன்றுதிரண்ட மக்கள் பொலிஸாரின் செயற்பாட்டை கண்டித்ததுடன் அங்கு வந்த 119 பொலிஸாருடனும் வாக்குவாதப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

image-5ec273e3c40996ba9b7ce7690a387e7950c88c186759ffcd4ed2637301ad0fff-V image-ade1fce6a9c21da8c32bc153c6910c3750106fa2ac7c224a2b53ae4d8c6c4feb-V image-c87401eaaa96d38dd6d859efda1ec893e65da98dbe7226edd222c4dbd9a7dcf5-V image-d5ed1f6a02b51619ba9f4723423dee68cd48cbe6ae9ac9f93bf27309ee4877a0-V