அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல் முன்னிலையில் சந்தேக நபரை ஆஜர்படுத்தியபோதே மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரி யவருவதாவது;
அக்கரைப்பற்று அளிக்கம்பை தேவ கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஆலையடி வேம் பைச்சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தைகளை கூறி கடந்த ஜூன் மாதம் 16 ஆம் திகதி பஸ்ஸில் கதிர்காமத்துக்கு அழைத்து சென்று அங்கு சிறிது காலம் வாழ்ந்து வந்துள்ளனர்.
பின்னர் இருவரும் சிறுமியின் ஆலையடி வேம்பு பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு வந்து அங்கு வசித்து வந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபரின் மனைவி பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் இருவரையும் கைது செய்து சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சிறுமியை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.





