முழு முக தலைக்கவச தடை நீக்கம் நீடிப்பு!!

545

Healmet

மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் முகத்தை முற்றாக மறைக்கும் வகையில் முழுமுக தலைக்கவசம் அணிவதற்கு பொலிஸார் விதித்துள்ள தடைக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ம் திகதி வரை குறித்த தடையுத்தரவை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய வழக்கில் பொலிஸ் தரப்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, இந்த வழக்கை சமரசமாக முடிவுக்கு கொண்டுவர கால அவகாசம் கேட்டிருந்தார்.

இதன்படி குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.