போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த தொழிநுட்ப உபாயங்கள்!!

667

11742978_10153385022061327_4417814123667833186_nநாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் கடைபிடிக்கப்படும் தொழிநுட்ப உபாயங்களை பயன்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்கள் மற்றும் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான நிறுவன அதிகாரிகளுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டையும், இளம் சந்ததியினரையும் போதை பொருள் பாதிப்பில் இருந்து மீட்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களை தாம் பொறுப்புடன் முன்னெடுக்க உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதற்கு அமைச்சுக்களும், நிறுவனங்களும் உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.