சதொசவில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெருந் தொகை உணவுப் பொருட்கள் அழிப்பு!!

1319

DSC02569மக்களின் பாவனைக்குதவாத நாட்டரிசி (7,780 கிலோ), வெள்ளை அரசி (1250 கிலோ), கௌப்பீ 67 (கிலோ) ஆகியவற்றை அழிக்குமாறு ஹட்டன் நீதிமன்றத்தின் நீதவான் பிரசாத் லியனகே பொகவந்தலாவ சுகாதார பரிசோதகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து,ஹட்டன் நகரத்திலுள்ள லக் சதொசயில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மக்களின் பாவனைக்குதவாத வண்டு, புழுக்கள் அடங்கிய உணவுப் பொருட்கள் நேற்று பொகவந்தலாவ சுகாதார பரிசோதகர் பி.கே.எல் வசந்தவினால் ஹட்டன் – குடாகம பகுதியில் வைத்து அழிக்கப்பட்டது.