பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் தொகை புதிய பாராளுமன்றத்தில் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்.
எட்டாவது பாராளுமன்றத்தின் சம்பிரதாய அமர்வில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் உரைகளின் பின்னர் விசேட கூற்று ஒன்றை விடுத்து பேசுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
வாக்களித்த மக்கள் தமக்கான சேவை, தேவை குறித்து கடிதங்கள் மூலம் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். மக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று கூறினார்.