சென்னையில் இருந்து மங்களூர் சென்ற விரைவு ரயில் கடலூர் அருகே இன்று அதிகாலை 2 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 25 பெண்கள் உட்பட 38 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த ரயில் கடலூர் மாவட்டத்தில் பூவனூர் விருதாச்சலம் இடையே விஜயமாநகரம் என்கிற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது தடம் புரண்டது.
இதனையடுத்து மீட்புக் குழுவினர் உடனடியாக அங்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் சேதமடைந்த பாதையை சீரமைக்கும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
விபத்தின் காரணமாக, சென்னை-திருச்சி ரயில்வே மார்க்கத்தில், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.





