
முல்லைத்தீவு விஸ்வமடு தேராவில் தமிழ் வித்தியாலயம் ,மற்றும் முல்லைத்தீவு வள்ளுவர்புரம் பாரதி வித்தியாலயங்களில் கல்வி கற்க்கும் முன்னாள் போராளிகள் ,மற்றும் மாவீர்களின் கற்றல் செயற்பாட்டை கொண்டு போக முடியாமல் கஷ்டபட்ட 45 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சாந்தநாயகி நற்பணி மன்றத்தால்நேற்று 04.09.2015 வெள்ளிகிழமை அந்ததந்த பாடசாலைகளில் வைத்து வழங்கி வைக்க பட்டன .
தேராவில் தமிழ் வித்தியாலயத்தில் அதிபர் திரு யோகராசா அவர்களின் தலைமையிலும் ,பாரதி வித்தியாலயத்தில் அதிபர் திரு சற்குணசீலன் அவர்களின் தலைமையிலும் இடம் பெற்ற இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் சந்திரகுமார்,மாணிக்கம்ஜெகன் வள்ளுவர்புரம் செல்லமுத்து வெளியீட்டக உரிமையாளரும் ,சமூக சேவையாளருமான கவிஞர் யோ.புரட்சி மற்றும் ஆசிரியர்கள் ,சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர் .
முல்லைத்தீவு விஸ்வமடு தேராவில் தமிழ் வித்தியாலய அதிபர் திரு யோகராசாஅவர்கள் கருத்து தெரிவிக்கையில் இப்படியான கஷ்ட பட்ட மாணவர்களுக்கு கல்வி ஊட்டுவதன் மூலம் நல்ல சமுகத்தை உருவாக்க முடியும் எனவும் அதற்கான முயற்ச்சி எடுத்த தமிழ் விருட்சத்துக்கும் ,வழங்கிய சாந்தநாயகி நற்பணி மன்றத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் எனவும் இது தொரடவேண்டும் என்றும் கேட்டு கொண்டார் .
முல்லைத்தீவு வள்ளுவர்புரம் பாரதி வித்தியாலய அதிபர் திரு சற்குணசீலன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் உங்களின் இந்த செயற்பாட்டை பாராடுவதுடன் வவுனியாவில் இருந்து நீங்கள் செயற்பட்டாலும் ,முல்லைத்தீவு மாணவர்களின் நலனில் அக்கறை எடுத்தமை பாராடுதுலக்கும்,வரவேற்புக்கும் உரிய விடயம் என்றும் மேலும் 85 வறிய மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் தேவை எனவும் அதையும் நிறைவேற்றி தரும் படி கேட்டு கொண்டதுடன் ,தமிழ் விருட்சம் ,சாந்தநாயகி நற்பணி மன்றத்துக்கும் நன்றியையும் தெரிவித்து கொண்டார் .
வறிய ,மற்றும் தாய் ,தந்தை இழந்த,முன்னாள் போராளிகளின் பிள்ளைகளின் கற்றல் செயட்பாடை இடையூறு இன்றி கொண்டு செல்வதற்காக முயற்சி எடுத்து வருவதாகவும் அவர்கள் வடமாகாணம் அன்றி எந்த பிரதேசத்தில் இருந்தாலும் எம்மால் முடிந்த உதவிகளை செய்து வருவதாகவும் விரைவில் அந்த 85 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்க புலம் பெயர் உறவுகள் மூலம் அன்றில் சமூக அக்கறை கொண்ட நல்லுள்ளங்கள் மூலம் ஆவன செய்வதாகவும் சொல்லி இந்த பிள்ளைகளின் நிலையை தமிழ் விருட்சத்துக்கு தெரிய படுத்திய கவிஞர் யோ புரட்சி ,மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிய சாந்தநாயகி நற்பணி மன்றத்துக்கும் நன்றியை தெரிவித்து விடை பெற்றனர்.














