மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதனுக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டுகோள்!!

408

6716

மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சென்னையில் சிலை அமைக்கப்பட்டு வருகிறது.மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு தமிழ்நாடு திரையிசை கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அண்மையில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கவிஞர் கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் கலந்து கொண்டு பேசும்போது, ‘‘எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும்.

மயிலாப்பூர்லஸ் கார்னரிலோ, கடற்கரை சந்திப்பிலோ அந்த சிலையை நிறுவவேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாக கங்கை அமரன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், இசையமைப் பாளர்கள் இளையராஜா, கங்கை அமரன், எஸ்.ஏ.ராஜ்குமார், டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, எஸ்.எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ்குமார், பின்னணி பாடகர்கள் எஸ்.பி. சரண், ஹரிசரண், உன்னிகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.