நீதிமன்றுக்கு செல்லும் வழியில் சுகயீனமுற்ற வாஸ் குணவர்த்தன!!

463

dig Vaas-Gunawardena

விளக்கமறியலில் வைத்திருந்த முன்னாள் பிரதிக்காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன இன்று காலை நீதிமன்றம் அழைத்து செல்லும் வழியில் திடீர் சுகயீனத்தால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் ஷியாம் என்ற வர்த்தகர் கடத்திச் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவே வாஸ் குணவர்தன கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.