வவுனியா நகரசபையின் சிற்றூழியர்களது வருடாந்த சம்பள அதிகரிப்பு வழங்கபடாததை கண்டித்து போராட்டம்(படங்கள்)

443

வவுனியா நகரசபையின் சிற்றூழியர்கள் தமக்கு வருடாந்த சம்பள அதிகரிப்பு நகர சபையினால் வழங்கப்படாததை கண்டித்தும்   தாம் சம்பள ரீதியில் மீண்டும் மீண்டும் புறக்கனிக்கப்படுவதாகவும் தெரிவித்து நேற்று (07.09.2015)திங்கட்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அத்துடன் இது தொடர்பாக தம்மால் முன்னரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுத்துள்ளதாகவும் அப்போது இப் பிரச்சினைக்கு ஒரு வார காலப்பகுதிக்குள் இதனை சீர்செய்வதாக நகரசபையினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டமையால் தாம் ஆர்ப்பட்டத்தை முடித்துக் கொண்டதாகவும் தெரிவித்தனா்.

ஆனால் இதற்கான எந்த நடவடிக்கைகளையும் நகரசபையால் முன்னெடுக்கப்படவில்லை அத்துடன் நகர சபையில் இருந்து சிற்றூழியர்கள் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாகவும் இவை எல்லாவற்றிற்கும் சரியான நடவடிக்கைகள் எடுக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என்று நகர சபை சிற்றூழியர்கள் தெரிவித்தனர்.

-பிராந்திய செய்தியாளர் –

10474284_1044993982179831_7771729157320280909_n 11659352_1044993942179835_8119325834449644174_n 11960263_1044993948846501_5808972879065249441_n 11990384_1044993938846502_7718741775965605168_n 12002056_1044993978846498_4535991556763472739_n 12002070_1044993985513164_1477447000497425240_n