
23 வயதானயுவதியை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, தப்பிச் சென்ற நபர் ஒருவர் சம்பந்தமாக ரக்கமை பொலிஸில் யுவதியின் பாட்டியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரத்கமை, ரனபனாதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான குறித்த சந்தேகநபரின் மனைவி அவரிடமிருந்து பிரிந்து வாழ்வதாகத் தெரிவிக்கப்படுவதோடு, இவர் பல வழக்குகளுடன் தொடர்புபட்ட குற்றவாளி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நடைபெற்ற தினத்தில், சந்தேகநபரும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான யுவதியும் யுவதியின் அத்தையும் அவரது வீட்டில் தங்கியிருந்துள்ளார்கள்.
குறித்த சம்பவத்தின் பின்னர், சந்தேகநபரால் யுவதியின் அத்தை பயமுறுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர், வீட்டை வீட்டு தப்பிச் சென்றுள்ளாதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதியும் அப்பிரதேசத்திலிருந்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.