இனிவரும் காலங்களில் எமது இனம் எந்த அமைச்சர்களிடமும் கையேந்தும்நிலை இருக்காது! மன்னாரில்செல்வம் அடைக்கலநாதன்!

456

selvam_mannar_peo_006

இனிவரும் காலங்களில் எமது இனம் எந்த அமைச்சர்களிடமும் கையேந்தாத அளவிற்கு எங்களது செயற்பாடுகள் இருக்கும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் கடந்த சனிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு மன்னார் மக்கள் மற்றும் ஆதரவாளர்களினால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இதன் போது தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) அமைப்பின் மன்னார் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து உரை நிகழ்த்திய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-இவர் மேலும் உரையாற்றுகையில்

மக்களின் விடுதலை சார்ந்து செல்லும் எனது பணிக்கு ஒரு தடையாக இந்த அரசாங்கம் அல்லது எனது இந்த பதவி இருக்கமாக இருந்தால் அடுத்த நிமிடமே இந்த பதவியை தூக்கி எறிவேன்.

இந்த மன்ணுக்கு இந்த பதவி பெருமை சேர்த்துள்ளது. குறிப்பாக வன்னி மாவட்டம் இதனால் பெருமையடைந்துள்ளது. என்னை பெறுத்த மட்டில் மக்களை சென்று பார்க்காததால் அவர்களுக்கு கேபமாக இருந்தாலும் அவர்கள் என்னை மன்னித்து வாக்களித்திருக்கிறார்கள்.

அதற்கு நான் நன்றி கூறுகிறேன். இவ்வாறான பிரச்சினைகள் மீண்டும் வராதவாறு நான் பார்த்துக் கொள்வேன்.

ஜக்கிய தேசிய கட்சி எமது சிறுபான்மையினங்கள் அரசியலில் பிரகாசிக்க கூடாது என்று கடந்த காலங்களில் அரசியல் யாப்பினை மாற்றியது.

ஆனால் இன்று அதே ஜக்கிய தேசிய கட்சி இந்த எதிர்க்கட்சி பதவியினை இந்த மூன்றாவது அணியாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைக்கின்ற வாய்ப்பபை இன்றைக்கு அவர்கள் பார்த்துகொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக எதிர்க்கட்சி பதவி தமிழர்களுக்கு கிடைத்து ஒரு பெரிய கௌரவம் இரண்டாவதாக பாராளுமன்றத்திலே குழுக்களின் பிரதி தலைவர் என்பது இந்த வன்னி மாவட்டத்திற்கு குறிப்பாக மன்னார் மாவட்டத்திற்கு கிடைத்த கௌரவம்.

ஆனால் இந்த பதவி சம்பந்தமாக பல கருத்துக்கள் வெளிவருகிறது.
அதாவது நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து விட்டோம் அவர்களது கதிரையில் அமர்ந்துவிட்டோம்.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து விட்டதா? என்ற கேள்வி பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளும் அவ்வாறான நிலைகாணப்படுகிறது.

என்னை பொறுத்தமட்டில் இது பாராளுமன்றத்தின் ஒரு பதவியே தவிர அரசாங்கத்தில் யாருமே தலையிட முடியாத ஒரு பதவியாகவே இது காணப்படுகிறது.

ஆகவே இது நாடாளுமன்ற பதவியே ஒழிய இது அரசாங்கத்துடன் அங்கம் வகிக்கும் ஒரு பதவியல்ல.

அடுத்தாக இவ்வளவு காலமும் இந்த பதவியில் இருந்தவர்கள் அரசு சார்பாக அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டதின் காரணமாக இருக்கின்ற அதனுடைய ஆசனம் அரசாங்க தரப்பிலே போடப்பட்டிருந்தது.

இப்போது எதிர்க்கட்சி பக்கம் இந்த பதவி வந்ததால் நாங்கள் அந்த ஆசனத்தை எதிர்க்கட்சியின் தலைவர் இருககின்ற ஆசனத்திற்கு பின்னால்தான் எமக்கு தரப்பட்டிருக்கிறது.

ஆகவே ஆளும் கட்சியிலே அமருகின்ற வாய்ப்பு ஒருகாலும் இருக்காது இருக்கவும் முடியாது என்பதினை நான் குறிப்பிடுகிறேன்.

அரசாங்கத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து விட்டது என்கின்ற சிந்தனையை சிந்திக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அதைவிட எதிர்க்கட்சி பதவி என்பது தொடர்பில் பலரும் பல கருத்துக்களை சொல்கிறார்கள்.

அதாவது ஐ.நா சபையில் வருகின்ற தீர்மானத்தை வலுவிழக்க செய்கின்ற விதத்திலேயே அந்த பதவிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது என சொல்கிறார்கள்.

தமிழிலே சொல்வார்கள் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது என்று ஆகவே எதிர்க்கட்சி என்பது எமது மக்களுக்கு கிடைத்த கௌரவம்.

ஆகவே அதைக் கொண்டு சர்வதேச ரீதியில் எமது மக்களின் அன்றாட பிரச்சினைகள் மற்றம் இன பிரச்சினைகளை எமது மக்கள் இராணுவத்திடம் பறி கொடுக்கின்ற நிலங்களை விடுதலை செய்கின்ற எமது சொந்த கடலை அனுபவிக்க முடியாமல் இந்திய மற்றும் தென்னிலங்கை வாதிகளினால் தடுக்கப்பட்டுள்ள தன்மையை நீக்குகின்ற

விவசாயிகளின் நிலங்கள் பறிபோய்கொண்டு இருக்கின்ற நிலமைகளை சர்வதேசத்திற்கு நாம் எதிர்கடகட்சி என்கின்ற அந்தஸ்தோடு சொல்கின்றபோது அது பெறுமதிமிக்கதாக அமையும் என்பதை நான் இச்சந்தர்ப்பதிலே சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஆகவே எமது இனத்தின் விடுதலை என்பது இதனுடாக எட்டக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது. ஆகவே இந்த இரண்டு விடயங்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மக்களால் கொடுக்கப்பட்ட மாபெரும் வெற்றி என்பதை இந்த வடக்கு கிழக்கு மக்களுக்கு விசேடமாக இந்த வன்னி மாவட்ட மக்களுக்கும் அவர்களது பாதங்களில் சமர்ப்பித்து நிற்கின்றேன்.

ஆகவே எனக்கு கிடைக்கின்ற வரப்பிரசாரங்கள் வசதிகளை எனது மக்கள் அனுபவிப்பதற்காக நான் நிச்சயமாக போராடுவேன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அதற்கு மேலாக போரால் பாதிக்கப்பட்டு இடுப்பிற்கு கீழ் இயங்க முடியாது இருக்கின்ற எங்களுடைய போராளிகள் இளைஞர் யுவதிகளுக்கு எனக்கு வழங்கப்படும் நிதியில் இருந்து ஒரு பகுதியை அவர்களுக்கு ஒதுக்க தயாராக இருக்கின்றேன் என்பதை கூறிக்கொண்டு

மேலும் அதைவிட குறிப்பாக அனுமதிகிடைத்தும் பல்கலைக்கழகம் செல்லமுடியாமல் கல்வியை தெலைத்து நிற்கபோகின்ற நிலையில் இருக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு அவர்களது கல்விக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்றேன்.

ஆகவே எனது பணி மக்களை சார்ந்ததாக இருக்கும் தமிழ் மக்களினுடைய இன விடுதலையை சார்ந்ததாக இருக்கும்.

எனது மக்களின் விடுதலை சார்ந்து செல்லும் எனது பணிக்கு ஒரு தடையாக இந்த அரசாங்கம் அல்லது எனது இந்த பதவி இருக்கமாக இருந்தால் அடுத்த நிமிடமே இந்த பதவியை தூக்கி எறிவோன் என்று தெரிவித்து கொள்கிறேன்.

ஆகவே இந்த சந்தர்ப்பத்தை தந்த மடு அன்னை,மன்னார் மறைமாவட்ட ஆயர்,அருட்பணியாளர்கள்,எனது மக்கள் அணைவருக்கும் மனமார்ந்த நன்றிளை தெரிவித்து கொள்வதோடு, இனிவரும் காலங்களில் எமது இனம் எந்த அமைச்சர்களிடமும் கையேந்தாத அளவிற்கு எங்களது செயற்பாடுகள் இருக்கும் என்று தெரிவித்து கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.