நாளை கைத்தொழில் வணிக அமைச்சராக மீண்டும் ரிசாத் பதியுதீன் பதவியேற்பு!

437
1Minister_Rishad_3_0
கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ரிசாத் பதியுதீன் நாளை தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ளார்.

வன்னி தேர்தல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி என்ற வகையில் மாவட்டத்தின் முக்கிய தமிழ், சிங்களத் தலைவர்களுக்கும் தனது பதவி ஏற்பு வைபவத்தில் கலந்து கொள்ள அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் தேசிய அரசாங்கத்தின் முக்கிய செயற்திட்டங்களில் ஒன்றான நாடு முழுதும் 45 பொருளாதார வலயங்களை நிறுவும் திட்டத்தின் கீழ் வன்னியில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் இரண்டு பொருளாதார வலயங்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் ரிசாத் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் என்ற ரீதியில் அரசியலில் இருதுருவமாகச் செயற்பட்ட கட்சிகள் இணைந்து செயற்பட முன்வந்துள்ளது போன்று வன்னி மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார்.