வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று சுத்திகரிப்பு ஒப்பந்த ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான இந்திரராஜா, தியாகாராஜா ஆகியோர் கலந்துரையாடியதுடன், அவர்களின் பிரச்சனை குறித்தும் கேட்டறிந்து கொண்டனர்.
அத்துடன் வடமாகாண சுகாதார அமைச்சருக்கு பணிப் புறக்கணிப்பிலிடுபட்டவர்களினால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியும் வழங்கப்பட்டது.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுத்திகரிப்பு ஊழியர்களின் போராட்டம் குறித்து வடமாகாண சுகாதார அமைச்சர், மத்திய சுகாதார அமைச்சர் ஆகியோருடனும் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.






