மத்தளயில் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்!!

1334

picமத்­தள மஹிந்த ராஜ­பக்ஷ சர்­வ­தேச விமான நிலை­யத்தில் நேற்று ஸ்ரீ லங்கன் விமானம் ஒன்று தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ளது.மிக நீண்­ட­நாட்­க­ளாக மத்­தள விமான நிலை­யத்­துக்கு விமா­னங்கள் வருகை தர­வில்லை என்ற கார­ணத்தை முன்­னிட்டு அந்த விமான நிலை­யத்தை மூடி­விட தேசிய அர­சாங்கம் முடி­வெ­டுத்­தி­ருந்­தது.

அத்­துடன் விமான நிலை­யத்தின் விமானப் பொதிகள் களஞ்­சியத் தொகு­தியை நெல் களஞ்­சி­யப்­ப­டுத்­து­வ­தற்கும் பயன்­ப­டு த்­தப்­பட்டு வரு­கின்­றது.

இந்­நி­லையில் மிக நீண்ட நாட்­களின் பின் ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று நேற்று மத்­த­ளயில் தரை­யி­றங்­கி­யுள்­ளது.

லண்­ட­னி­லி­ருந்து கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை நோக்கி வந்து கொண்­ டி­ருந்த இந்த விமானம் கால நிலை சீர்கேடு காரணமாக மத்தளயில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு தரையிறக்கப்பட்ட இந்த விமானம் அங்கிருந்து மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது.இந்த விமானத்தில் 244 பயணிகள் பய ணித்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.