போதைப்பொருள் பாவனையை மட்டுப்படுத்துவதற்காக நாடுபூராகவும் விஷேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மதுபோதையற்ற வலயங்கள் செயற்படுத்தப்படும் என்று அந்த சபையின் தலைவர் வைத்தியர் திலங்க சமரசிங்க தெரிவித்தார்.
கிராமிய மட்டங்களில் 30 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு போதைவஸ்துக்கு அடிமையாவதை கட்டுப்படுத்துவதற்கு மக்களை தௌிவூட்டும் வேலைத்திட்டம் ஒன்று இதன்கீழ் மேற்கொள்ளப்படும் என்றும் வைத்தியர் திலங்க சமரசிங்க தெரிவித்தார்.





