கடிகாரம் தயாரித்து கைதான மாணவனை வெள்ளை மாளிகைக்கு அழைத்த ஒபாமா!!

453

APTOPIX-Texas-Muslim-_NH

கடிகாரத்தை வெடிகுண்டு என நினைத்த ஆசிரியர்கள், பொலிஸாரிடம் ஒப்படைத்த மாணவனை வெள்ளை மாளிகைக்கு வருமாறு ஜனாதிபதி ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மெக் ஆர்தர் பாடசாலையில் 9ஆவது தரத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவன், அகமது முகமது பாடசாலையில் கொடுக்கப்பட் ஒரு ஒப்படைக்காகவும் சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் கவருவதற்காகவும் ஒரு கடிகாரம் ஒன்றை செய்துள்ளான்.

ஆனால் அதைப் பார்த்த ஆசிரியை ஒருவர், அது வெடிகுண்டு போல இருப்பதாகவும், தன்னை மிரட்டுவதறக்காகத்தான் அந்த மாணவன் அதை எடுத்து வந்திருப்பதாகவும் பாடசாலை நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.

உடனே பாடசாலை நிர்வாகம், பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து குறித்த மாணவன் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

விசாரணையின்போது அம் மாணவன், நடந்ததை தெளிவாக கூறியுள்ளார். இதையடுத்து மாணவன் மீது எந்த குற்றமும் இல்லை என கருதிய பொலிஸார் உடனே விடுதலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி மாணவனுக்கு ஆதரவு குவிந்தது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கைது செய்யப்பட்ட மாணவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரை வெள்ளை மாளிகையில் அடுத்த மாதம் நடைபெறும் விண்வெளி அறிஞர்களுக்கான விருந்தில் கலந்துக்கொள்ள அழைத்துள்ளார்.

இது பற்றி டுவிட்டரில் ஒபாமா கூறியுள்ளதாவது “உங்கள் கடிகாரம் மிகவும் அருமை. அதை அதிபர் மாளிகைக்கு எடுத்து வர விருப்பமா? உங்களைப் போன்ற சிறுவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

இதுதான் அமெரிக்கா பெருமைமிக்க நாடாக வைத்திருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் வொஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடக்க உள்ள வானியல் இரவு நிகழ்ச்சியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ‘நாசா’வின் விஞ்ஞானிகளும் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தான் உருவாக்கிய கடிகரத்தின் அலராத்தையே , தினமும் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்துக்கொள்ள பயன்படுத்தியதாக மாணவன் தெரிவித்துள்ளார்.மேலும் குறித்த மாணவன் கைது செய்யப்பட்ட போது அவர் அணிந்திருந்த உடையில் ’நாசா’ சொல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.