விசாரணை அறிக்கையை வரவேற்கிறோம்-விக்­கி­ர­ம­பாகு!!

461

1490410205v2இலங்­கையில் இடம்­பெற்­றுள்ள போர்க்­குற்­றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசேட கலப்பு நீதி­மன்றம் மூலம் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும் என்ற அடிப்­ப­டையில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் வெளி­யிட்­டுள்ள விசா­ரணை அறிக்­கையை வர­வேற்­ப­தாக நவ­ச­ம­ச­மாஜக் கட்­சியின் தலைவர் விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ண தெரி­வித்தார்.

சர்­வ­தேச நாடு­களின் நம்­பிக்கையின் பிர­காரம் நாட்டில் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டவும் மூவின மக்­களின் உரி­மை­களை பாது­காக்­கவும் ஐக்­கிய நாடு­களின் பரிந்­து­ரை­களை நிறை­வேற்ற அர­சா­னது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தினார்.கொழும்பில் அமைந்­துள்ள நவ­ச­ம­ச­மாஜக் கட்­சியின் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

இலங்­கையில் இடம்­பெற்­றுள்ள போர்க்­குற்­றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேச நீதி­ப­திகள், சட்­ட­த்த­ர­ணிகள் மற்றும் விசா­ரணை­யா­ளர்­களை உள்­ள­டக்­கிய விசேட கலப்பு நீதி­மன்றம் ஒன்றை அமைத்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்க வேண்டும் என்ற அடிப்­ப­டையில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் வெளி­யிட்­டுள்ள விசா­ரணை அறிக்­கையை நாம் வர­வேற்­கின்றோம்.முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஆட்­சியை முன்­னெ­டுத்த பாசிச குழு­வி­ன­ரி­னது சில மோச­மான செயற்­பா­டுகளின் மத்­தி­யி­லேயே யுத்­தத்தின் இறு­திக்­கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

அந்­த­வ­கையில் இன்று யுத்த காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் வெளி­யிட்­டுள்ள விசா­ரணை அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ரு­க்கின்ற விட­யங்கள் தொடர்பில் முன்­னைய ஆட்­சியின் அர­சியல் பிர­மு­கர்­களே பொறுப்புக்கூறவேண்டும்.

கடந்த ஜன­வரி 8 ஆம் திகதி சர்­வாதி­கார ஆட்­சிக்கும் பாசி­ச­வா­தி­களின் செயற்­பா­டு­க­ளுக்கு முற்று புள்ளி வைக்கும் நோக்­கு­ட­னேயே மூவின மக்­களும் ஒன்­றி­ணைந்து நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்­தினர்.அந்­த­வ­கையில் மீண்டும் முன்னாள் ஜனா­தி­ப­தியின் ஆத­ரவு தரப்­பினர் சர்­வா­தி­கார ஆட்­சியை மீண்டும் தொடர செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்த வேளை மீண்டும் மக்­களால் இவர்கள் தோற்­க­டிக்­கப்­பட்­டனர்.
இன்­றைய தேசிய அர­சாங்­கத்தின் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் யுத்த காலப்­ப­கு­தியில் அப்­பாவி மக்­களை காப்­பாற்றும் நோக்­குடன் விடு­தலை புலி­க­ளுடன் போர் நிறுத்தம் தொடர்பில் ஒப்­பந்தம் ஒன்று கைசாத்­திட முயற்­சித்த செயற் பா­டு­களும் அன்­றைய காலக்­கட்­டத்தில் தோல்வி கண்­டது.

அந்­த­வ­கையில் இன்­றைய அர­சா­னது மக்­களின் நம்­பிக்­கையின் பிர­காரம் நாட்டில் ஜன­நா­யகத்­தையும் சட்­டத்­தையும் உரியமுறையில் நிறை­வேற்ற முயற்­சி­களை மேற்கொள்ள வேண்டும்.கடந்த காலங்­களில் நாட்டில் சட்டம் மற்றும் நீதித்துறை என்பன சர்வாதிகார சக்திகளிடம் அடி பணிந்து காணப்பட்டது. அந்தவகையிலேயே இன்று இலங்கை இவ்வாறான நிலைமை ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளது.
எனவே புதிய அரசானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.