நேற்று ரயில் ஒன்று தடம்புரண்டமையால் தலவ பிரதேசத்தில் இருந்து வட பகுதிக்கான ரயில் சேவைகள் பாதிப்படைந்திருந்தன.
யாழில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது என, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் நேற்று இரவு முதல் வடக்கிற்கான இரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.