தான் கல்விகற்ற பாடசாலைக்கு கோடிகளை அள்ளிக்கொடுத்த உசைன் போல்ட்!!

426

Bolt

உலகின் ‘மின்னல் வேக மனி­த­ரான’ ஜமைக்­காவின் உசைன் போல்ட், தான் படித்த பாட­சா­லைக்கு இலங்கை மதிப்பில் 17 கோடி ரூபா மதிப்பிலான விளை­யாட்டு உப­க­ர­ணங்­களை வழங்­கி­யுள்ளார்.

உசைன் போல்ட் ஜமைக்­காவில் உள்ள ட்ரெலானி என்ற சிறிய நக­ரத்தில் பிறந்­த­வ­ராவார். அங்குள்ள வில்­லியம் க்நிப் ஞாப­கார்த்த உயர் பாட­சா­லையில் படித்த போதுதான் சிறந்த தட­கள வீர­ராக உரு­வாக ஆரம்­பித்தார்.

இந்­நி­லையில் தான் படித்த இந்த பாட­சா­லைக்கு சுமார் ஒரு மில்­லியன் அமெ­ரிக்க டொலர் மதிப்பிலான கிரிக்கெட் மட்டை, பந்­துகள், கையு­றைகள் உள்­ளிட்ட கிரிக்கெட் உப­க­ர­ணங்கள், கால்பந்­தாட்ட பந்­துகள், கால­ணிகள், தட­கள வீரர்­க­ளுக்­கான உப­க­ர­ணங்கள் உள்­ளிட்ட விளையாட்டு உப­க­ர­ணங்­களை வழங்­கி­யி­ருந்தார்.

மேலும், அறக்­கட்­டளை மூல­மா­கவும் தான் பிறந்த மண்­ணுக்கு பல உத­வி­களை செய்தும் வருகிறார்.

உசைன் போல்ட், அண்­மையில் சீனாவின் பெய்ஜிங் நகரில் நடை­பெற்ற உலகத் தட­களப் போட்டியில் 100மீற்றர், 200மீற்றர் ஓட்டப் பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.